/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி அரசு கல்லுாரியில் புகுந்த நல்லபாம்பு மீட்பு
/
திருத்தணி அரசு கல்லுாரியில் புகுந்த நல்லபாம்பு மீட்பு
திருத்தணி அரசு கல்லுாரியில் புகுந்த நல்லபாம்பு மீட்பு
திருத்தணி அரசு கல்லுாரியில் புகுந்த நல்லபாம்பு மீட்பு
ADDED : அக் 01, 2024 07:32 AM

திருத்தணி: சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி மேதினாபுரம் பகுதியில் சுப்ரமணிய சுவாமி அரசினர் கலைக் கல்லுாரி இயங்கி வருகிறது. இங்கு, 3,000க்கும் மேற்பட்ட மாணவ- - மாணவியர் படித்து வருகின்றனர்.
கல்லுாரியில் நேற்று வழக்கம் போல, வகுப்புகள் நடந்து வந்தன. மதிய நேரம், ஆறு அடி நீளமுள்ள நல்லபாம்பு ஒன்று கல்லுாரி நுழைவு வாயில் வழியாக அங்குள்ள ஒரு வகுப்பறையில் திடீரென புகுந்தது.
இதை பார்த்த பேராசிரியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். திருத்தணி தீயணைப்பு வீரர்கள் வந்து நல்லபாம்பை ஒரு மணி நேரம் போராடி பிடித்து, திருத்தணி அருகே உள்ள வனப்பகுதியில் உயிருடன் விட்டனர்.