/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி முருகன் கோவிலில் பால்குடம் எடுக்க முன்பதிவு
/
திருத்தணி முருகன் கோவிலில் பால்குடம் எடுக்க முன்பதிவு
திருத்தணி முருகன் கோவிலில் பால்குடம் எடுக்க முன்பதிவு
திருத்தணி முருகன் கோவிலில் பால்குடம் எடுக்க முன்பதிவு
ADDED : ஏப் 12, 2025 09:30 PM
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று, காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு, 1,008 பால்குட அபிஷேகம் நடந்து வருகிறது.
இதற்காக, முருகன் கோவிலின் உபகோவிலான கோட்டா ஆறுமுக சுவாமி கோவில் வளாகத்தில் இருந்து, வரும் 14ம் தேதி காலை 1,008 பால்குட ஊர்வலம், கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு, பக்தர்கள் நடைபாதையாக பால்குடம் சுமந்து, மலைப்படிகள் வழியாக மலைக்கோவில் காவடி மண்டபத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
இந்த பால்குடம் கொண்டு செல்வதற்கு பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். இதுகுறித்து திருத்தணி கோவில் இணை ஆணையர் ரமணி கூறியதாவது:
தமிழ் புத்தாண்டு தினத்தன்று கோட்டா ஆறுமுக சுவாமி கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் கொண்டு செல்வதற்கு, இன்று முதல் முருகன் மலைக்கோவில் அலுவலகம் மற்றும் நாளை காலை 7:30 மணிக்க கோட்டா ஆறுமுக சுவாமி கோவில் வளாகத்தில், சிறப்பு கவுன்டர் மூலம் முன்பதிவு செய்யப்படுகிறது.
பால்குடம் எடுக்க விரும்பும் பக்தர்கள், 250 ரூபாய் முன்பணம் செலுத்தி பதிவு செய்துக் கொள்ள வேண்டும். இதுதவிர நிரந்தர கட்டளைதாராக பக்தர்கள் விரும்பினால், 5,000 ரூபாய் ரொக்கம் அல்லது காசோலையாக முருகன் கோவில் அலுவலகத்தில் செலுத்தினால், ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று பால்குடம் எடுக்கும் வாய்ப்பு கிடைக்கும். எனவே, பக்தர்கள் விரைந்து பால்குடத்திற்கு முன்பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

