/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழவேற்காடு - ஜமீலாபாத் சாலை சரிவுகள் மழையில் கரைவதால் பகுதிவாசிகள் அச்சம்
/
பழவேற்காடு - ஜமீலாபாத் சாலை சரிவுகள் மழையில் கரைவதால் பகுதிவாசிகள் அச்சம்
பழவேற்காடு - ஜமீலாபாத் சாலை சரிவுகள் மழையில் கரைவதால் பகுதிவாசிகள் அச்சம்
பழவேற்காடு - ஜமீலாபாத் சாலை சரிவுகள் மழையில் கரைவதால் பகுதிவாசிகள் அச்சம்
ADDED : நவ 25, 2024 02:22 AM

பழவேற்காடு,:பழவேற்காடு பகுதியில் இருந்து ஜமீலாபாத், தோணிரவு, செஞ்சியம்மன் நகர் ஆகிய மீனவ கிராமங்களுக்கு உப்பங்கழியின் குறுக்கே, 6 அடி உயரத்தில் சிமென்ட் சாலை அமைந்துள்ளது.
கடந்த 2016 புயல் மழையின் போது, பழவேற்காடு உவர்ப்பு நீர் ஏரியில் இருந்து வெளியேறிய அதிகப்படியான மழைநீரால், இச்சாலை சேதமடைந்தது.
சாலையின் சரிவுப்பகுகளில் பதிக்கப்பட்டிருந்த பாறை கற்கள் மழைநீரில் அடித்து செல்லலப்பட்டன. சரிவுகளில் தொடர்ந்து மண் அரிப்பு ஏற்பட்டும், தொடர் வாகன போக்குவரத்தால் கான்கிரீட் கட்டுமானங்களும் உடைந்தன.
எனவே, சாலையை சீரமைக்கக்கோரி தொடர்ந்து மீனவ கிராமத்தினர் வலியுறுத்தி வந்தனர். தற்போது, சாலை சரிவுகளில் மண்ணை நிரப்பி பலப்படுத்தப்பட்டு உள்ளது.
ஆனால், தற்போது பெய்து வரும் மழையால் சரிவுப்பகுதிகளில் கொட்டப்பட்ட மண் கரைந்து வருகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் சாலையோரத்தில் செல்ல தயங்குகின்றனர். இரவு நேரங்களில் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
குறுகலான இந்த சாலையில், எதிர்ரெதிரே வாகனங்கள் சந்திக்கும்போது, சரிவில் கொட்டப்பட்டுள்ள மண்ணில் சிக்கி, உப்பங்கழியில் விழும் அபாயம் உள்ளது.
எனவே, அசம்பாவிதங்கள் நேரிடும் முன், சாலையின் இருபுறமும் சரிவுப்பகுதிகளில் பாறை கற்கள் பதித்து பலப்படுத்திடவும், சேதமடைந்துள்ள பகுதிகளை புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.