/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலையால் கடம்பத்துார் பகுதிவாசிகள் அவதி
/
ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலையால் கடம்பத்துார் பகுதிவாசிகள் அவதி
ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலையால் கடம்பத்துார் பகுதிவாசிகள் அவதி
ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலையால் கடம்பத்துார் பகுதிவாசிகள் அவதி
ADDED : ஏப் 18, 2025 02:54 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஊராட்சியிலிருந்து ரயில் நிலையம் வழியே அதிகத்துார் செல்லும் ஒன்றிய சாலை உள்ளது.
மணவாளநகர் செல்ல கடம்பத்துார் மற்றும் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். சேதமடைந்த மோசமான நிலையில் இருந்த இந்த ஒன்றிய சாலையில், 2020-21ம் ஆண்டு ஊரக வளர்ச்சித்துறை உள்ளாட்சித்துறையின் சாலை மேம்பாட்டு திட்டத்தில் 62.09 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ரயில் நிலையம் அலுவலகம் வரை, சிமென்ட் சாலையாகவும், அதைத் தொடர்ந்து தார் சாலையும் போடப்பட்டது.
சிமென்ட் சாலை தற்போது ஆங்காங்கே சேதமடைந்து, ஜல்லி கற்கள் பெயர்ந்து மோசமான நிலைக்கு மாறியுள்ளது. இதனால் இவ்வழியாக அதிகத்துார் வழியாக மணவாளநகர் மற்றும் ரயில் நிலையத்திற்கு இருசக்கர வாகனங்களில் செல்வோரும், நடந்து செல்வோரும் சிரமப்படுகின்றனர்.
அருகிலேயே ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவலகம் இருந்தும், ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலையை சீரமைக்காதது, பகுதிவாசிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, கடம்பத்துாரில் ரயில் நிலையம் வழியாக அதிகத்துார் செல்லும் ஒன்றிய சாலையை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

