/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொட்டு விடும் துாரத்தில் மின் வயர்கள் அச்சத்தில் கூடப்பாக்கம் பகுதிவாசிகள்

ADDED : நவ 28, 2024 12:33 AM

வெள்ளவேடு:பூந்தமல்லி ஒன்றியம் வெள்ளவேடு அடுத்துள்ளது கூடப்பாக்கம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட கலெக்டர் நகர் பகுதியில் சாலையோரம் மின்கம்பங்களுக்கு இடையே செல்லும் மின் வயர்கள் தாழ்வான நிலையில் செல்கின்றன.
மேலும் சாலையோரம் உள்ள மின்கம்பத்தில் இருந்து வீடுகளுக்கு செல்லும் மின்கம்பங்கள் மிகவும் தாழ்வான நிலையில் உள்ளது.
மேலும் மின்கம்பங்கள் புதருக்குள் மாயமாகி வருகிறது. இதனால் இவ்வழியே வாகனங்களில் செல்வோர் மற்றும் பகதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
தாழ்வான நிலையில் உள்ள மின் வயர்களை சீரமைக்க கோரி மின்வாரிய ஊழியர்களிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, ஏதேனும் அசம்பாவிம் நிகழும் முன் மாவட்ட நிர்வாகம் கலெக்டர் நகர் குடியிருப்பு பகுதியில் ஆய்வு செய்து தாழ்வான நிலையில் உள்ள மின் வயர்களை சீரமைக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.