/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கால்வாய் கரை சீரமைப்பில் அலட்சியம் நெற்குன்றம் குடியிருப்புவாசிகள் தவிப்பு

ADDED : ஜன 12, 2024 09:38 PM

சோழவரம்:சோழவரம் அடுத்த நெற்குன்றம் கிராமத்தில் உள்ள பாசன ஏரியின் கலங்கலில் இருந்து வெளியேறும் உபரிநீர், கால்வாய் வழியாக கொசஸ்தலை ஆற்றுக்கு செல்கிறது.
கால்வாயின் கரைகளை ஒட்டி பட்டா நிலங்களில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த கால்வாயின் கரைகள் பலவீனமடைந்து இருப்பதால், மழைக்காலங்களில் கரைகள் முழுதும் மழைநீரில் சரிந்து விடுகிறது.
கால்வாய் கரைகளுடன், குடியிருப்பு நிலங்களிலும் மண் அரிப்பு ஏற்படுகிறது. மண் சரிவை தடுக்க குடியிருப்புவாசிகள் மணல் மூட்டைகளை கட்டி போட்டி தங்களது வீடுகளை பாதுகாத்துக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது.
மேலும் இந்த கால்வாய் முழுதும் மரம், செடிகள் வளர்ந்து புதராக இருப்பதால், மழைநீர் ஆற்றிற்கு செல்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது. கால்வாயின் கரைகளை பலப்படுத்தி தரவேண்டும் என பொதுப்பணித்துறையினரிடம் பலமுறை தெரிவித்தும், அத்துறையினர் அலட்சியம் காட்டுவதாக குடியிருப்புவாசிகள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.
கால்வாயின் கரைகளை பலப்படுத்தி, மண் சரிவை தடுக்க கற்கள் பதித்திட வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்