/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பில்லாத என்.ஜி.ஓ., காலனி பூங்கா துர்நாற்றம் வீசுவதால் பகுதிவாசிகள் அவதி
/
பராமரிப்பில்லாத என்.ஜி.ஓ., காலனி பூங்கா துர்நாற்றம் வீசுவதால் பகுதிவாசிகள் அவதி
பராமரிப்பில்லாத என்.ஜி.ஓ., காலனி பூங்கா துர்நாற்றம் வீசுவதால் பகுதிவாசிகள் அவதி
பராமரிப்பில்லாத என்.ஜி.ஓ., காலனி பூங்கா துர்நாற்றம் வீசுவதால் பகுதிவாசிகள் அவதி
ADDED : ஜன 19, 2025 02:39 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட என்.ஜி.ஓ., காலனி பூங்கா பராமரிப்பில்லாததால், மழைநீர் தேங்கியும், சிறுவர்கள் விளையாடும் இடம் புதராகவும் மாறியுள்ளது.
திருவள்ளூர் நகராட்சி, 20வது வார்டுக்கு உட்பட்டது என்.ஜி.ஓ., காலனி. இங்கு, 10 ஏக்கர் பரப்பளவில் பெரிய அளவிலான பூங்கா ஏற்படுத்தப்பட்டது. நகராட்சியில் முதன் முதலில் அமைக்கப்பட்ட பூங்கா என்ற பெயரை பெற்ற இங்கு, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், மரங்கள், நடைபயிற்சியாளருக்கு நீண்ட நடைபாதை, இருக்கை வசதி, கழிப்பறை, சிறுவர் விளையாடும் இடம் என, பல்வேறு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
கடந்த, 10 ஆண்டுக்கும் மேலாக இந்த பூங்காவினை நகராட்சி நிர்வாகம், தனியாக பராமரிப்பாளரை நியமித்து, நல்ல முறையில் பராமரித்து வருகிறது. இந்த நிலையில், பூங்காவின் மேற்கு பகுதியில், தாழ்வான இடத்தில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில் பெய்த மழைநீர் வெளியேற வழியில்லாமல், பூங்காவிலேயே தேங்கியது. தற்போது, மழைநீர் சகதியாக மாறி துர்நாற்றம் வீசுகிறது.
பூங்கா முழுதும், செடிகள் வளர்ந்து புதராக காட்சியளிக்கிறது. சிறுவர் விளையாடும் இடத்தில், பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால், கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், சிறுவர் விளையாடும் ஊஞ்சல் உள்ளிட்ட கருவிகள் அனைத்தும், புதருக்குள் மறைந்து விட்டது.
எனவே, நகராட்சி நிர்வாகம் பூங்காவினை முறையாக பராமரித்து, சிறுவர்கள் விளையாடும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

