/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடியிருப்பு பகுதியில் மோசமான சாலை திருமழிசை பகுதிவாசிகள் அவதி
/
குடியிருப்பு பகுதியில் மோசமான சாலை திருமழிசை பகுதிவாசிகள் அவதி
குடியிருப்பு பகுதியில் மோசமான சாலை திருமழிசை பகுதிவாசிகள் அவதி
குடியிருப்பு பகுதியில் மோசமான சாலை திருமழிசை பகுதிவாசிகள் அவதி
ADDED : டிச 02, 2024 02:57 AM

திருவள்ளூர்:திருமழிசை பேரூராட்சியில் 15 வார்டுகளில் 130க்கும் மேற்பட்ட தெருக்களில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள 15 வார்டுகளில் பல பகுதிகளில் தெருக்கள் கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது.
குறிப்பாக பேரூராட்சி அலுவலகம் செல்லும் சாலை மற்றும் அருகில் உள்ள ஜவகர் தெரு உட்பட பல இடங்களில் கற்கள் பெயர்ந்து மோசமாகி பல்லாங்குழியாக மாறியுள்ளது.
சிறு மழை பெய்தால் சாலையில் உள்ள பள்ளங்கள் சிறு குளமாக மாறியுள்ளதால் பகுதிவாசிகள் நடந்து கூட செல்ல முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். சாலைகளை சீரமைக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.