/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாம்பல் லாரிகளால் சுகாதாரம் பாதிப்பு குடியிருப்புவாசிகள், வியாபாரிகள் தவிப்பு
/
சாம்பல் லாரிகளால் சுகாதாரம் பாதிப்பு குடியிருப்புவாசிகள், வியாபாரிகள் தவிப்பு
சாம்பல் லாரிகளால் சுகாதாரம் பாதிப்பு குடியிருப்புவாசிகள், வியாபாரிகள் தவிப்பு
சாம்பல் லாரிகளால் சுகாதாரம் பாதிப்பு குடியிருப்புவாசிகள், வியாபாரிகள் தவிப்பு
ADDED : செப் 25, 2024 12:53 AM

சோழவரம்:மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு மற்றும் வல்லுார் பகுதிகளில் உள்ள அனல்மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகள் சாலைப்பணிகள், செங்கல் உற்பத்தி மற்றும் சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு டிப்பர் லாரிகளில் கொண்டு செல்லப்படுகின்றன.
இவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலை மற்றும் மீஞ்சூர் - பொன்னேரி மாநில நெடுஞ்சாலை வழியாக டிப்பர் லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக குவித்து வைத்து கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த 'ஓவர் லோடு' சாம்பல் கழிவுகள் மேடு பள்ளங்களிலும், வேகத்தடைகள் இருக்கும் பகுதிகளிலும் செல்லும்போது, சாலையில் சிதறுகின்றன.
சாம்பல் கழிவுகள் சாலைகளில் ஆங்காங்கே சிறு சிறு குவியல்களாக சிதறி, பின் அவற்றின் மற்ற வாகனங்கள் செல்லும்போது புழுதியாக மாறி காற்றில் பறக்கிறது.
இந்நிலையில், மீஞ்சூரில் இருந்து கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாம்பல் லாரிகள்.அருமந்தை - ஒரக்காடு சாலை வழியாக செல்கின்றன.
சாலை முழுதும் சாம்பல் கழிவுகள் கொட்டியபடி செல்வதால், அருகில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் மற்றும் வியாபாரிகள் பெரும் இன்னலுக்கும், சுகாதார பாதிப்புகளுக்கும் ஆளாகி தவிக்கின்றனர்.
இது குறித்து குடியிருப்புவாசிகள் கூறியதாவது:
சாம்பல் ஏற்றிச்செல்லும் டிப்பர் லாரிகள் மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலை மற்றும் சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரண்டு 'டோல்கேட்' களின் கட்டணத்தை தவிர்க்க, அருமந்தை - ஒரக்காடு சாலையில் பயணிக்கின்றன.
அதிக சுமையுடன் இவை செல்வதால், கழிவுகள் சாலையில் குவிந்து புழுதியாக பறக்கிறது. இதனால் மூச்சுதிணறல், தொண்டை கரகரப்பு, வறட்டு இருமல் உள்ளிட்டவை ஏற்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால் நுரையீரல் பாதிப்பு, புறறுநோய் உள்ளிட்டவை நேரிடும் நிலை உள்ளது. போக்குவரத்து போலீசார் உரிய கண்காணிப்பு மேற்கொண்டு, சாம்பல் லாரிகள் அருமந்தை - ஒரக்காடு சாலையில் செல்வதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.