ADDED : ஏப் 16, 2025 08:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி நகராட்சி பழைய தர்மராஜாகோவில் அருகே, நகராட்சியில் சேகரமாகும் குப்பை கழிவு கொட்டப்பட்டு, தீயிட்டு எரிக்கப்படுகிறது. மேலும், சிலர் இறைச்சி கழிவுகளை கோவில் அருகே கொட்டுவதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர்.
இந்த கோவில் அருகே வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் சார் - கருவூலக அலுவலகம் இயங்கி வருகிறது. இந்நிலையில், குப்பை கழிவுகளை எரிப்பதால் சுவாச கோளாறும், இறைச்சி கழிவுகளால் துர்நாற்றமும் வீசி வருகிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, குப்பை கழிவுகளை எரிப்பதை தடுக்க வேண்டும். மேலும், இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.