ADDED : நவ 12, 2024 07:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு, : திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டது சின்னம்மாபேட்டை ஊராட்சி. இங்கு 15,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு சின்னம்மாபேட்டை -வியாசபுரம் வரையில், நபார்டு மற்றும் கிராம சாலைகள் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ், 2.25 கி.மீ., 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது.
அப்போது சாலைக்கு இடையே சின்னம்மாபேட்டை ஓடையின் குறுக்கே கட்டப்பட்ட ஓடை தரைப்பாலத்தின் மீது, 100 மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக் காமல் விடப்பட்டது.
இதனால் அச்சாலை பள்ளம் மேடாக இருந்ததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி அவதியடைந்தனர்.
இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதை அடுத்து தரைப்பாலம் மீது சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது.