தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ஆற்று மணல் திருட்டு டூ - வீலர் பறிமுதல்

ஆற்று மணல் திருட்டு டூ - வீலர் பறிமுதல்

ஆற்று மணல் திருட்டு டூ - வீலர் பறிமுதல்


ADDED : பிப் 29, 2024 01:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 29, 2024 01:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த நெமிலியகரம் பகுதியில் நேற்று முன்தினம் திருவள்ளூர் தாலுகா போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது, 'ஹீரோ ஹோண்டா ஸ்பிளன்டர்' இருசக்கர வாகனத்தில் வந்த நபர், போலீசாரைக் கண்டதும் வாகனத்தை கீழே போட்டு விட்டு தப்பியோடினார். அருகே சென்று போலீசார் பார்த்தபோது, 25 கிலோ கொண்ட இரண்டு மணல் மூட்டைகளுடன் இருசக்கர வாகனம் கிடந்தது.

இதுகுறித்து வழக்கு பதிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் இரு சக்கர வாகனத்தையும், இரண்டு மணல் மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, நெமிலியகரத்தைச் சேர்ந்த சுரேஷ், 41, என்பவரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us