/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கனகவல்லிபுரத்தில் தாக்கிய போதை நபர்களை கண்டித்து சாலை மறியல் போராட்டம்

UPDATED : ஆக 01, 2025 01:10 AM
ADDED : ஆக 01, 2025 01:08 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் அருகே கஞ்சா போதையில் இளைஞர்களை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி பகுதி மக்கள் சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.
![]() |
திருவள்ளூர் அடுத்த கனகவல்லிபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வலம் வந்த பாண்டூர் பகுதி வாலிபர்களை அப்பகுதி வாலிபர்கள் தடுத்து நிறுத்தி கண்டித்துள்ளனர்.
கண்டித்தவர்களை பாண்டூர் வாலிபர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கனகவல்லிபுரம் பகுதி மக்கள் சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு நடத்தினர்.
அப்போது பகுதி மக்கள், தங்கள் பகுதியில் கஞ்சா போதையில் வாலிபர் கள் இருசக்கர வாகனத்தில் வலம் வருவதாகவும், பெண்களை கிண்டல் செய்வதாகவும் கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.