/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போக்குவரத்து நகரில் சாலை சேதம் குடியிருப்புவாசிகள் கடும் அவதி
/
போக்குவரத்து நகரில் சாலை சேதம் குடியிருப்புவாசிகள் கடும் அவதி
போக்குவரத்து நகரில் சாலை சேதம் குடியிருப்புவாசிகள் கடும் அவதி
போக்குவரத்து நகரில் சாலை சேதம் குடியிருப்புவாசிகள் கடும் அவதி
ADDED : டிச 28, 2024 01:55 AM

திருவள்ளூர்:ஈக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட போக்குவரத்து நகரில் சேதமடைந்த சாலையால் குடியிருப்புவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருவள்ளூர்-செங்குன்றம் சாலையில் ஈக்காடு ஊராட்சி அமைந்துள்ளது. திருவள்ளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இந்த ஊராட்சி பகுதி வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட போக்குவரத்து நகரில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இக்குடியிருப்புவாசிகள், அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவ மாணவியர் மற்றும் பொதுமக்கள் ஈக்காடு வழியாக திருவள்ளூருக்கு சென்று வருகின்றனர். போக்குவரத்து நகரில் இருந்து ஈக்காடு பிரதான சாலைக்கு வர, சரியான சாலை வசதி இல்லை. மேலும், தெருக்களிலும், சாலை குண்டும், குழியுமாக உள்ளது.
சமீபத்தில் பெய்த மழையால், இங்குள்ள சாலைகள் அனைத்தும் சேதமடைந்து, ஜல்லி கற்கள் பெயர்ந்து உள்ளன. சாலையில் நடக்க முடியாமல் குடியிருப்புவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலையில், அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ், ஆட்டோக்கள் உள்ளே வரமுடியாத சூழல் நிலவுகிறது.
எனவே, போக்குவரத்து நகரில் உள்ள சாலைகளை சீரமைத்து, தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்புவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

