/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
/
பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
ADDED : பிப் 16, 2024 07:40 PM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், மேல்நல்லாத்துார் ஊராட்சி ஒன்றிய அரசு உயர்நிலைப் பள்ளியில், கேட்டர்பில்லர் தனியார் தொழிற்சாலை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா நடந்தது.
பள்ளி உதவித் தலைமையாசிரியர் பாபு தலைமையில் தனியார் தொழிற்சாலை பாதுகாப்பு பயிற்சியாளர்கள் சின்னமருது, அருண்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில் பள்ளி மாணவர்களிடம் சாலை பாதுகாப்பு குறித்து அருண்குமார் விளக்கி பேசினார்.
போக்குவரத்து விதிமுறைகளையும், சைககைளையும் பின்பற்றினால் சாலை விபத்துகளை தடுக்க முடியும் என கூறப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவர்களிடம் சாலை பாதுகாப்பு குறித்து நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-- மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.
இரு சக்கர வாகனங்களை ஓட்டும்போது ஹெல்மெட் அணிய வேண்டும். மொபைல்போன் பேசிக் கொண்டே வாகனங்கள் ஓட்டக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது.