தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/பார்க்கிங் ஏரியாவான சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி

பார்க்கிங் ஏரியாவான சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி

பார்க்கிங் ஏரியாவான சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி


ADDED : ஏப் 13, 2025 02:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2025 02:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவாலங்காடு:திருவாலங்காடு சன்னிதி தெருவில் செயல்படும் இந்தியன் வங்கிக்கு மணவூர், சின்னம்மாபேட்டை, கூடல்வாடி, வீரராகவபுரம் உட்பட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில், 25,000க்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

மகளிர் குழு மற்றும் வாடிக்கையாளர் என, 500 பேர் தினமும் வங்கிக்கு பண பரிவர்த்தனை செய்ய வந்து செல்கின்றனர். இதனால், எப்போதும் வங்கியில் கூட்டம் அலைமோதும். சமீபகாலமாக, இருசக்கர வாகனத்தில் வருவோர் வங்கி எதிரே உள்ள சன்னிதி தெரு சாலையில், வாகனத்தை நிறுத்திவிட்டு வங்கிக்குள் செல்கின்றனர்.

இதனால், அந்த வழியாக கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்குவதோடு, விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் மீது திருவாலங்காடு காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us