சாலையோர தடுப்பு சேதம் வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
சாலையோர தடுப்பு சேதம் வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
ADDED : ஏப் 02, 2026 06:34 PM

திருத்தணி: நெமிலி ஏரிக்கரையில் அலுமினிய தடுப்பு தகடுகள் சேதமடைந்துள்ளதால் அச்சத்துடன் வாகன ஓட்டிகள் செல்கின்றனர்.
திருவாலங்காடு ஒன்றியம், நெமிலி ஏரிக்கரையின் மீது தார்ச் சாலை அமைக்கப்பட்டுள்ளன. இச்சாலை வழியாக திருத்தணி - நாகாலாபுரம் மார்க்கத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
குறிப்பாக, இச்சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகளவில் திருத்தணி நகருக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், விபத்துக்களை தவிர்க்க, மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏரிக்கரையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டது.
இதை முறையாக ஊராட்சி நிர்வாகம் மற்றும் நீர்வளத்துறையினர் பராமரிக்காததால் தடுப்புகள் சேதமடைந்துள்ளன.
இதனால் ஏரிக்கரை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே,
எனவே, சேதமடைந்த தடுப்புகளை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
