தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சாலையோரம் குப்பை எரிப்பு வாகன ஓட்டிகள் கடும் அவதி

 சாலையோரம் குப்பை எரிப்பு வாகன ஓட்டிகள் கடும் அவதி

 சாலையோரம் குப்பை எரிப்பு வாகன ஓட்டிகள் கடும் அவதி


ADDED : பிப் 03, 2026 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2026 05:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருமழிசை: பூந்தமல்லி செல்லும் மாநில நெடுஞ்சாலையோரம் குப்பை எரிப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருமழிசை பேரூராட்சியில், பூந்தமல்லி செல்லும் மாநில நெடுஞ்சாலை வழியே, தினமும் 50,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில் உள்ள சோதனைச்சாவடி மையம் எதிரே, நெடுஞ்சாலையோரம் குப்பை கொட்டப்பட்டுள்ளது.

இந்த குப்பையை பேரூராட்சி நிர்வாகம் முறையாக அகற்றுவதில்லை என, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும், இப்பகுதியில் சேகரமாகும் குப்பையை மர்ம நபர்கள் தீ வைத்து வருகின்றனர்.

இந்த புகையால், இவ்வழியே வாகனங்களில் செல்வோர் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, நெடுஞ்சாலையோரம் சேகரமாகும் குப்பையை தினமும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us