/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையோரம் இறைச்சி கடைகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
சாலையோரம் இறைச்சி கடைகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : ஏப் 06, 2025 11:31 PM

திருத்தணி:திருத்தணி நகரத்தில் சித்துார், அரக்கோணம் சாலை மற்றும் புதிய, பழைய சென்னை சாலை ஆகிய மாநில நெடுஞ்சாலையோரம், 50க்கும் மேற்பட்டோர் ஆடு, கோழி மற்றும் மீன் போன்ற இறைச்சி கடைகள் திறந்தவெளியில் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
இச்சாலையை ஆக்கிரமித்து இறைச்சி கடைகள் நடத்தி வருவதை நெடுஞ்சாலை துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. மேலும், இறைச்சி வாங்குவதற்கு இருசக்கர வாகனங்களில் வரும் வாடிக்கையாளர்கள், தங்கள் வாகனங்களை நெடுஞ்சாலையிலேயே நிறுத்திவிட்டு இறைச்சி வாங்குகின்றனர்.
இதனால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, திருத்தணி - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை மற்றும் திருத்தணி - சித்துார் மாநில நெடுஞ்சாலை ஆகிய இடங்களில், 15க்கும் மேற்பட்டோர் சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் இறைச்சி வாங்குவதற்கு, நுாற்றுக்கணக்கானோர் நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு இறைச்சி வாங்குகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், நெடுஞ்சாலையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள இறைச்சி கடைகளை அகற்றி, நிரந்தர தடை விதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

