/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விபத்து அச்சத்தை ஏற்படுத்தும் சாலையோர பஞ்சர் கடைகள்
/
விபத்து அச்சத்தை ஏற்படுத்தும் சாலையோர பஞ்சர் கடைகள்
விபத்து அச்சத்தை ஏற்படுத்தும் சாலையோர பஞ்சர் கடைகள்
விபத்து அச்சத்தை ஏற்படுத்தும் சாலையோர பஞ்சர் கடைகள்
ADDED : டிச 09, 2024 02:20 AM

கும்மிடிப்பூண்டி:சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் முதல் எளாவூர் சோதனைச்சாவடி வரை, 15க்கும் மேற்பட்ட நடமாடும் பஞ்சர் கடைகள் இயங்கி வருகின்றனர். 'டாடா ஏஸ்' போன்ற சரக்கு வாகனங்களில், கம்ப்ரசர் மற்றும் பஞ்சர் போட தேவைப்படும் உபகரண்ங்களை வைத்துக் கொள்கின்றனர்.
தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதன் இணைப்பு சாலையோரம், நிலையாக ஒரு இடத்தை தேர்வு செய்து தினசரி வாகனத்தை அங்கு நிறுத்தி பஞ்சர் போடும் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். சாலையோரம் ஆபத்தாக நிறுத்தப்படும், பஞ்சர் கடை வாகனங்களால், விபத்து அபாயம் அதிகரித்து வருகின்றன.
அவற்றை அகற்ற வேண்டிய தேசிய நெடுஞ்சாலை ரோந்து படையினரும், ரோந்து போலீசாரும் கண்டுக்கொள்ளாமல் வேண்டிக்கை பார்த்து வருவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் அத்துமீறி செயல்படும் இதுபோன்ற பஞ்சர் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். மீண்டும் வராமல் இருக்க முறையாக கண்காணிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.