/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ராக்கெட் ஏவுதல் ஒத்திவைப்பு மீன் பிடிக்க தடை
/
ராக்கெட் ஏவுதல் ஒத்திவைப்பு மீன் பிடிக்க தடை
ADDED : டிச 04, 2024 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ராக்கெட் ஏவுதள மையத்தில் இருந்து, நேற்று, 'பிஎஸ்எல்வி சி-59/ப்ரோபா-3' விண்கலம் ஏவப்பட இருந்தது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு, இன்று, மாலை 4:12 மணிக்கு ஏவப்பட இருப்பதாக இஸ்ரோ தெரிவித்தது.
இதனால், திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க, நேற்று தடை விதித்திருந்த நிலையில், அந்த தடை இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை, மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறையினர் சார்பில், தெரிவிக்கப்பட்டது.