/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆவடி புறவழிச்சாலை சந்திப்பில் ரவுண்டானா பணி பாதியில் நிறுத்தம்
/
ஆவடி புறவழிச்சாலை சந்திப்பில் ரவுண்டானா பணி பாதியில் நிறுத்தம்
ஆவடி புறவழிச்சாலை சந்திப்பில் ரவுண்டானா பணி பாதியில் நிறுத்தம்
ஆவடி புறவழிச்சாலை சந்திப்பில் ரவுண்டானா பணி பாதியில் நிறுத்தம்
ADDED : டிச 16, 2025 06:16 AM

திருவள்ளூர்: ஆவடி புறவழிச்சாலை சந்திப்பில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டும், 'ரவுண்டானா' பணி பாதியில் நிறுத்தப்பட்டதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
திருவள்ளூர் ஜே.என்.சாலையில், தீயணைப்பு நிலையம் எதிரே ஆவடி புறவழிச்சாலை உள்ளது. திருவள்ளூர் ரயில் நிலையம், பூந்தமல்லி பகுதியில் இருந்து வரும் வாகனங்களும், திருவள்ளூர் பேருந்து நிலையம் பகுதியில் இருந்து செல்லும் வாகனங்களும், இச்சாலை சந்திப்பை கடந்து தான் செல்ல வேண்டும்.
மேலும், ஆவடி சாலையில் இருந்து திருவள்ளூர் வரும் வாகனங்களும், இச்சந்திப்பை கடப்பதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து, நெடுஞ்சாலை துறையினர், ஆறு மாதங்களுக்கு முன், ஜே.என்.சாலை - ஆவடி புறவழிச்சாலை சந்திப்பு அருகே இருந்த ஆக்கிரமிப்பு கட்டடங்களை அதிரடியாக அகற்றினர்.
பின், ஆவடி சாலை சந்திப்பில், வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில், சிறு தடுப்பு அமைத்து சாலை பிரிக்கப்பட்டது. மேலும், சாலையின் குறுக்கே மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கால்வாய் பணி மற்றும் ரவுண்டானா அமைக்கும் பணி தற்போது கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால், இந்த சந்திப்பில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, பாதியில் நிறுத்தப்பட்ட கால்வாய் பணியை முடித்து, ரவுண்டானா அமைக்க நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

