/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாமூல் கேட்டு டிபன் கடையை சூறையாடிய ரவுடிகள் கைது
/
மாமூல் கேட்டு டிபன் கடையை சூறையாடிய ரவுடிகள் கைது
ADDED : ஜன 10, 2025 02:02 AM

சென்னை, அண்ணா நகர், குமரன் நகரைச் சேர்ந்தவர் வெண்ணிலா, 35. இவர், அண்ணா நகர், நியூ ஆவடி சாலையோரத்தில், டிபன் கடை நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு, டிச., 21ம் தேதி இரவு, ஆட்டோவில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், வெண்ணிலாவை அவதுாறாக பேசி, மாமூல் கேட்டு மிரட்டினர்.
வெண்ணிலா பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர்கள், கடையில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி, கல்லாபெட்டியில் இருந்த, 1,500 ரூபாயை பறித்து தப்பினர். இதுகுறித்து, வெண்ணிலா அண்ணா நகர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்படி விசாரித்த போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட அயனாவரத்தை சேர்ந்த கோகுல்குமார், 25, மற்றும் அருணாச்சலம், 20, ஆகிய இருவரையும், டிச., 22ம் தேதி கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த, அண்ணா நகரைச் சேர்ந்த ரவுடி ஜோசப், 24, சூர்யா, 21, திருவள்ளூரை சேர்ந்த டேனியல், 21, மற்றும் பட்டாபிராமை சேர்ந்த கிருபா, 21, ஆகிய நால்வரை, போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
இதில், பழைய குற்றவாளிகளான ஜோசப் மீது, கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 18 வழக்குகளும், கிருபா மீது ஒன்பது வழக்குகளும் உள்ளன. நால்வரும் நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.