பறக்கும் படை சோதனையில் ரூ.1 லட்சம் ரூபாய் பறிமுதல்
பறக்கும் படை சோதனையில் ரூ.1 லட்சம் ரூபாய் பறிமுதல்
ADDED : மார் 26, 2026 06:20 PM

கும்மிடிப்பூண்டி: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழக எல்லையோர சோதனைச்சாவடியில் மேற்கொண்ட வாகன சோதனையில், 1 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில், நீர்வளத்துறை உதவி பொறியாளர் சீனிவாச பிரகாஷ் தலைமையிலான நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்று வாகன சோதனை செய்தனர்.
அப்போது, ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டையில் இருந்து, சென்னை நோக்கி வந்த காரை சோதனையிட்டனர். காரில் பயணித்த, ஷேக் சாகுல், 27, என்பவர், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த 1 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
கும்மிடிப்பூண்டி தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கடேசன் உத்தரவின்படி, தலைமையிடத்து துணை தாசில்தார் கனகவள்ளியிடம், பறிமுதல் பணம் ஒப்படைக்கப்பட்டது. பின், கும்மிடிப்பூண்டி சார் - கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
