ADDED : ஏப் 13, 2026 04:21 AM
அ நிறம் | அளவு
ஆவடி: ஆவடி அடுத்த திருநின்றவூர், சி.டி.எச்., சாலை டாட்டா ஸ்டீல் அருகே, தேர்தல் பறக்கும் படையினர், நேற்று முன்தினம் இரவு, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அவ்வழியாக வந்த, கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த கவுதம் என்பவர் மஹிந்திரா எக்ஸ்.யூ.வி., காரில், உரிய ஆவணங்களின்றி 1.25 லட்சம் ரூபாய் எடுத்து சென்றது தெரிந்தது. பறக்கும் படையினர் அவற்றை பறிமுதல் செய்து, ஆவடி அரசு கருவூலத்தில் நேற்று ஒப்படைத்தனர்.
