/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் ரூ.12.97 கோடி பணிகள் ரத்து: அதிகாரிகள் அலட்சியத்தால் கலெக்டர் அதிரடி

ADDED : ஆக 31, 2025 02:38 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், 2023 - 24ம் ஆண்டு, 15வது நிதிக்குழு மானியத்தில் வழங்கப்பட்ட பணிகளை துவக்காமல், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கிடப்பில் போட்டுள்ளனர். மாவட்ட கலெக்டர், 12.97 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டப் பணிகளை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகளுக்கு, 2023 - 24ம் ஆண்டு 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ், 14 ஒன்றியங்களுக்கு 86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இதில், சில பணிகள் துவக்கப்படாமல் உள்ளன. பல்வேறு பணிகள் கிடப்பில் போடப்பட்டு இருந்தன. இதை தொடர்ந்து, 12.97 கோடி ரூபாய் பணிகளை கலெக்டர் பிரதாப் ரத்து செய்து உத்தரவிட்டார்.
ஊரக வளர்ச்சித் துறை இணையதளத்திலும் நீக்கம் செய்ய வேண்டுமென, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், ஒதுக்கப்பட்ட நிதியை மீண்டும் அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டுமெனவும் தெரிவித்தார்.
இதில், முதல் மூன்று இடங்களை வில்லிவாக்கம், திருத்தணி, மீஞ்சூர் ஆகிய ஊராட்சிகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், பல்வேறு ஊராட்சிகளில் கால்வாய், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.