/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
20 பண்ணை குட்டை அமைக்க ரூ.15 லட்சம் மானியம்: கலெக்டர்
/
20 பண்ணை குட்டை அமைக்க ரூ.15 லட்சம் மானியம்: கலெக்டர்
20 பண்ணை குட்டை அமைக்க ரூ.15 லட்சம் மானியம்: கலெக்டர்
20 பண்ணை குட்டை அமைக்க ரூ.15 லட்சம் மானியம்: கலெக்டர்
ADDED : நவ 03, 2025 10:20 PM
திருவள்ளூர்: தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் பண்ணை குட்டை அமைக்க, 75,000 ரூபாய் வீதம் மொத்தம் 20 குட்டை அமைக்க, 15 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 155 விசை தெளிப்பான் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் விவசாயிகள், அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம்.
தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை 2025 - -26ம் ஆண்டில், தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் பண்ணை குட்டை அமைக்க, 75,000 ரூபாய் வீதம், மொத்தம் 20 குட்டை அமைக்க, 15 லட்சம் ரூபாய் மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பயனாளி தேர்வு நடைபெற்று வருகிறது. தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ், மண்புழு உரக்கூடம் அமைக்க, தலா 50,000 ரூபாய் வீதம், மொத்தம் 10 கூடம் அமைக்கவும், 5 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட உள்ளது.
மேலும், நிழல்வலை குடில் 1,000 ச.மீட்டர் பரப்பளவில் அமைக்க, ஒரு பயனாளிக்கு, 3.55 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ், தனிப்பட்ட விவசாயிகளுக்கு, 104 வேளாண் இயந்திரம் மற்றும் கருவிகள் வழங்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
தற்போது, 90 இயந்திரம் 77.71 லட்சம் ரூபாய் மானியத்தில் வழங்கப் பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

