/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பேனர் 'ஹாட் ஸ்பாட்'டாக மாறிய ரூ.2 கோடி ஆவடி 'செல்பி பாயின்ட்'
/
பேனர் 'ஹாட் ஸ்பாட்'டாக மாறிய ரூ.2 கோடி ஆவடி 'செல்பி பாயின்ட்'
பேனர் 'ஹாட் ஸ்பாட்'டாக மாறிய ரூ.2 கோடி ஆவடி 'செல்பி பாயின்ட்'
பேனர் 'ஹாட் ஸ்பாட்'டாக மாறிய ரூ.2 கோடி ஆவடி 'செல்பி பாயின்ட்'
ADDED : அக் 13, 2025 01:32 AM

ஆவடி:ஆவடியில், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 'செல்பி பாயின்ட்' பேனர்கள் வைக்கும் இடமாக மாறியுள்ளது.
ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே, ஆவடி மாநகரை அழகுபடுத்தும் விதமாக, கடந்த 2020ல் பொது நிதியில் இருந்து 2.08 கோடி ரூபாய் மதிப்பில் 'ஐ லவ் ஆவடி' என்ற பெயரில் 'செல்பி பாயின்ட்' மற்றும் செயற்கை நீரூற்று பூங்கா அமைக்கப்பட்டது.
கடந்த 2020 மார்ச் 25ல் பூங்கா திறக்கப்பட்டு, கொரோனா பரவல் காரணமாக 19 நாட்களிலேயே மூடப்பட்டது. அதன் பின் ஊரடங்கை காரணம் காட்டி, ஆவடி மாநகராட்சி பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை.
தொடர்ந்து, 2021 - 22 பொது நிதியில் 15 லட்சம் ரூபாய் மதிப்பில், நீரூற்றுக்கு பக்கவாட்டு சுவர் மற்றும் சிறு மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டன.
ஆனால் முறையான பராமரிப்பின்றி, செயற்கை நீரூற்று செயல்படாமல், செடி கொடிகள் முளைத்துள்ளன. ஏற்கனவே, 'செல்பி பாயின்ட்'டை சுற்றி சாலையோர கடைகள் ஆக்கிரமித்துள்ளன.
இந்நிலையில், பண்டிகை காலத்தை முன்னிட்டு, தனியார் நிறுவனங்கள், விதிமீறி பேனர் வைக்கும் 'ஹாட் ஸ்பாட்'டாக பயன்படுத்தி வருகிறது. இதை ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர்.
இதனால், பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட 'செல்பி பாயின்ட்' பயனற்று, மக்கள் வரிப்பணம் வீணாகி வருகிறது.
எனவே, விதிமீறி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.