/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூட்டை உடைத்து ரூ.20,000 திருட்டு
/
பூட்டை உடைத்து ரூ.20,000 திருட்டு
ADDED : ஜூலை 07, 2025 02:20 AM
ஊத்துக்கோட்டை:வீட்டின் பூட்டை உடைத்து, 20,000 ரூபாயை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
எல்லாபுரம் ஒன்றியம், பனப்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் முனுசாமி, 47. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி சீதாலட்சுமி, 38. நேற்று முன்தினம் முனுசாமி, இரவு பணிக்காக சென்று விட்டார். சீதாலட்சுமி தொளவேட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.
நேற்று காலை வீடு திரும்பிய சீதாலட்சுமி, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த புது துணிகள், 20,000 ரூபாய் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.
பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.