ADDED : நவ 06, 2024 07:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:இதயம் மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்காக, 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் தொகுதி காங்., - எம்.பி., சசிகாந்த் செந்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் லோக்சபா தொகுதி உறுப்பினர் அலுவலகத்திற்கு இதய நோய் அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்கு மருத்துவ உதவி கேட்டு ஏராளமானோர் மனு அளித்தனர்.
இந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதில், திருவள்ளூர் லோக்சபா தொகுதிசை் சேர்ந்த 10 பேருக்கு, 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.