திருமணத்திற்காக கொண்டு வந்த ரூ.2.50 லட்சம் பறிமுதல்
திருமணத்திற்காக கொண்டு வந்த ரூ.2.50 லட்சம் பறிமுதல்
ADDED : மார் 22, 2026 05:01 AM

திருத்தணி: பொன்பாடி சோதனை சாவடியில், போதிய ஆவணமின்றி திருமண செலவிற்காக கொண்டு வரப்பட்ட, 2.50 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
திருத்தணி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பொன்பாடி சோதனை சாவடியில் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் போதிய ஆவணங்கள் இல்லாமல், 2.50 லட்சம் ரூபாய் கொண்டு வந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், ஆந்திர மாநிலம், கூடூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசராவ் என்றும், இவர் தன் மகள் திருமணத்திற்காக காஞ்சிபுரத்தில் பட்டுப் புடவை எடுப்பதற்காக தனது குடும்பத்துடன், பணத்தை எடுத்து வந்ததும் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் தேர்தல் நடத்தும் அலுவலர் கனிமொழியிடம் ஒப்படைக்கப்பட்டது.
