/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
37 அரசு பள்ளிகள் சீரமைப்பு பணிக்கு ரூ.3 கோடி தேவை
/
37 அரசு பள்ளிகள் சீரமைப்பு பணிக்கு ரூ.3 கோடி தேவை
ADDED : அக் 11, 2025 08:10 PM
திருத்தணி:திருத்தணி கோட்டத்தில், 37 அரசு பள்ளிகளின் சீரமைப்பு பணிகளுக்கு, 3.03 கோடி ரூபாய் தேவை என, பொதுப்பணி துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.
திருத்தணி வருவாய் கோட்டத்தில், 27 அரசு உயர்நிலைப் பள்ளி, 29 அரசு மேல்நிலைப் பள்ளிகள் என, மொத்தம் 56 பள்ளிகள் உள்ளன.
இப்பள்ளிகளின் பராமரிப்பு மற்றும் புதிய கட்டடங்கள் கட்டும் பணிகளை, திருத்தணி பொதுப்பணித் துறை மேற்கொள்கிறது.
இந்நிலையில், பொதுப்பணித் துறை அதிகாரிகள், சேதமடைந்த அரசு பள்ளிகள், குடிநீர், கழிப்பறை, சுற்றுச்சுவர் மற்றும் வகுப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கணக்கெடுத்தனர்.
இதில், 37 பள்ளிகளில் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு, 3.03 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயாரித்து, மாவட்ட நிர்வாகத்திடம் நிதி ஒதுக்கக்கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி கூறியதாவது:
திருத்தணி தாலுகா - 14, பள்ளிப்பட்டு தாலுகா - 13, ஆர்.கே.பேட்டை தாலுகா - 10 ஆகிய இடங்களில், 37 பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்வதற்கும், வகுப்பறைகள் சீரமைப்பதற்கும் நிதி தேவைப்படுகிறது என, அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளோம்.
நிதி கிடைத்ததும், ஒரு மாதத்திற்குள் பணிகள் துவக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.