/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முதல்வர் கிராம சாலை திட்டம் 50 கி.மீ.,க்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு
/
முதல்வர் கிராம சாலை திட்டம் 50 கி.மீ.,க்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு
முதல்வர் கிராம சாலை திட்டம் 50 கி.மீ.,க்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு
முதல்வர் கிராம சாலை திட்டம் 50 கி.மீ.,க்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு
ADDED : மே 22, 2025 01:57 AM
திருவள்ளூர்:முதல்வர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில், நடப்பாண்டு 54 கி.மீ., சாலை அமைக்க, 30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய - மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய சாலை, மாவட்ட இதர சாலைகள் மற்றும் சர்க்கரைஆலை சாலைகள் என, 1,655 கி.மீ., நீளத்திற்கு தார், சிமென்ட் மற்றும் மண் சாலைகள் உள்ளன.
இதில், மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்டத்தின் முக்கிய மற்றும் இதர சாலைகள், தமிழக நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 526 ஊராட்சிகளில் உள்ள சாலைகளை, அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் பராமரித்து வருகின்றன. இந்த 526 கிராம ஊராட்சிகளில் உள்ள சாலைகளை, முதல்வர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தமிழக அரசு சீரமைத்து வருகிறது.
ஆண்டுதோறும் குறிப்பிட்ட ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலை பணிகள் இத்திட்டத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, சேதமடைந்த சாலைகள் அளவீடு செய்யப்படுகிறது. அதற்கு ஏற்றவாறு, தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து, 'டெண்டர்' விடப்பட்டு சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நடப்பு 2025 - 26ம் ஆண்டிற்கு, 54 கி.மீ., துாரத்திற்கு புதிய சாலை அமைக்க, 30.07 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.