ADDED : மார் 23, 2026 05:50 PM
அ நிறம் | அளவு
திருவள்ளூர்: இருசக்கர வாகனத்தில், ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 60,000 ரூபாயை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில், பூண்டி பேருந்து நிறுத்தம் அருகே நிலை கண்காணிப்பு குழுவினர், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த பூண்டி, வீரராகவபுரம் கிராமத்தைச் சேர்ந்த நவீன்பாபுவிடம், கண்காணிப்பு குழுவினர் சோதனையிட்டனர்.
அதில், ஆவணம் இன்றி, 60,000 ரூபாய் இருந்ததால், அதை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர். அவரிடம், தேர்தல் நடத்தும் அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார்.
