/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சுடுகாடு சீரமைக்க ரூ.7.50 லட்சம் ஒதுக்கீடு
/
சுடுகாடு சீரமைக்க ரூ.7.50 லட்சம் ஒதுக்கீடு
ADDED : நவ 28, 2024 01:01 AM

திருத்தணி:திருத்தணி நகராட்சி கலைஞர் நகர் நந்தியாற்றின் அருகே இரண்டு ஏக்கர் பரப்பில் சுடுகாடு இயங்கி வருகிறது.
அங்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் எரிமேடை, ஆழ்துளை கிணறு மற்றும் மழைநீர் வடிகால்வாய் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், புதியதாக மழைநீர் வடிகால்வாய் கட்டிய ஒரே ஆண்டில் கால்வாய் இடிந்து விழுந்தது.
இதனால் சுடுகாட்டிற்கு இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்வதில்மக்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து நம் நாளிதழில் 3ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, நகர்மன்ற கூட்டத்தில், கலைஞர் நகர் சுடுகாட்டில் உடைந்த கால்வாய் சீரமைத்தும், சுடுகாட்டிற்கு செல்வதற்கு வசதியாக படிகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்வதற்கு, நகராட்சி பொது நிதியில் இருந்து, 7.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இப்பணிகளுக்குடெண்டர் விடப்பட்டுள்ளன. ஒரு மாதத்திற்குள் சுடுகாடு சீரமைக்கப்படும் என நகராட்சி அதிகாரிஒருவர் தெரிவித்தார்.