ADDED : மார் 24, 2026 04:14 PM
அ நிறம் | அளவு
பொன்னேரி: தேர்தல் நிலை கண்காணிப்பு குழு சோதனையில், ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட, 75,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட புதுவாயல் பகுதியில் நேற்று, கும்மிடிப்பூண்டி கூட்டுறவு சார் - பதிவாளர் மாரியம்மாள் தலைமையிலான தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ஆரணி நோக்கி சென்ற 'ஸ்விப்ட்' காரை மடக்கி சோதனை செய்தபோது, அதில் பயணித்த கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் முல்லைவாயல் கிராமத்தைச் சேர்ந்த அருள் என்பவரிடம், 75,000 ரூபாய் இருந்தது.
உரிய ஆவணங்கள் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது.
