/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.8 கோடியில் ரயில்வே மேம்பாலம் பட்டாபிராமில் பணிகள் துவக்கம்
/
ரூ.8 கோடியில் ரயில்வே மேம்பாலம் பட்டாபிராமில் பணிகள் துவக்கம்
ரூ.8 கோடியில் ரயில்வே மேம்பாலம் பட்டாபிராமில் பணிகள் துவக்கம்
ரூ.8 கோடியில் ரயில்வே மேம்பாலம் பட்டாபிராமில் பணிகள் துவக்கம்
ADDED : நவ 05, 2024 07:07 AM

ஆவடி : சென்னை - திருவள் ளூரை இணைக்கும் வகையில், பட்டாபிராமில் 'எல்.சி., கேட் 2' ரயில்வே கடவுப்பாதை உள்ளது.
இங்கு, 45 நிமிடங்களுக்கு ஒரு முறை ரயில்வே கேட் மூடப்பட்டு, சென்னையில் இருந்து பட்டாபிராம் 'சைடிங்' செல்லும் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதனால், சாலையின் இருபுறமும் அரை கி.மீ., துாரம் வாகனங்கள் அணிவகுத்து நின்று, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண, எல்.சி., கேட் - 2 கடவு பாதையில், உயர்மட்ட மேம்பாலம் அமைக்க மத்திய - மாநில அரசுகள் முடிவெடுத்தன.
அதன்படி, மூன்று முறை திட்ட மதிப்பீடு திருத்தப்பட்டு, 78.31 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணி 2018ல் துவங்கியது.
ஆறு ஆண்டுகளாக நடந்த மேம்பாலத்தின் ஒருவழிப்பாதை பணிகள், கடந்த மாதம் முடிந்தது. இதையடுத்து, செப்., 25 ம் தேதி, மக்கள் பயன்பாட்டிற்கு மேம்பாலம் திறக்கப்பட்டது.
தொடர்ந்து, மேம்பாலத்தில் கிடப்பில் உள்ள ரயில்வே பணிகள் துவங்குவதற்காக, செப். 26ம் தேதி, எல்.சி.,கேட் - 2 கடவு பாதை நிரந்தரமாக மூடப்பட்டது.
அதன்படி, 60 மீட்டர் துாரத்திற்கு கிடப்பில் உள்ள ரயில்வே மேம்பால பணிகள், எட்டு கோடி ரூபாய் மதிப்பில் துவங்கி இரண்டு வாரங்களாக நடந்து வருகின்றன. இந்த பணிகள் ஆறு மாதங்களில் முடிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

