/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.18. 29 கோடியில் தீவிர சிகிச்சை பிரிவு
/
ரூ.18. 29 கோடியில் தீவிர சிகிச்சை பிரிவு
ADDED : பிப் 03, 2024 11:21 PM

திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் 52.93 லட்சம் ரூபாய் மதிப்பில், ஆறு படுக்கை வசதி கொண்ட மகப்பேறு உயர் சார்பு தீவிர சிகிச்சைப்பிரிவு துவக்க விழா நடந்தது.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
மேலும், 17.77 கோடி ரூபாய் செலவில் எட்டு அறுவை சிகிச்சை அறை கொண்ட அறுவை அரங்கம் மற்றும் 10 படுக்கை வசதிகள் கொண்ட அதிநவீன அறுவை சிகிச்சைக்குப்பின் பராமரிப்பு பிரிவு என மொத்தம் 18 கோடியே 29 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நவீன அறுவை சிகிச்சை கட்டடங்களை அமைச்சர் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
நிகழ்ச்சியில் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி, திருவள்ளூர், திருத்தணி எம்.எல்.ஏ.,க்கள் ராஜேந்திரன், சந்திரன் கல்லுாரி முதல்வர் உட்பட பலர் பங்கேற்றனர்.