/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாணவர்களுக்கு ரூ.51 கோடி கல்வி கடன்
/
மாணவர்களுக்கு ரூ.51 கோடி கல்வி கடன்
ADDED : பிப் 16, 2024 10:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூரில் நடந்த கல்விக்கடன் வழங்கும் முகாமில், 472 மாணவர்களுக்கு, 51 கோடி ரூபாய் கல்வி கடன் வழங்கப்பட்டது.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கூட்டரங்கில், மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு, வங்கி கடன் வழங்கும் முகாம் நடந்தது.
கலெக்டர் பிரபுசங்கர் முன்னிலை வகித்தார்.
கைத்தறி துறை அமைச்சர் காந்தி தலைமை வகித்து, 472 பேருக்கு, 51.38 கோடி ரூபாய் கல்வி கடன் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.