/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் இன்று ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம்
/
திருத்தணியில் இன்று ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம்
ADDED : அக் 06, 2024 12:57 AM
திருத்தணி,
நவராத்திரி மற்றும் விஜயதசமி ஒட்டி இன்று தமிழகம் முழுதும், 58 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடக்கிறது.
அந்த வகையில் திருத்தணி நகரில் இன்று மாலை, 3:30 மணிக்கு திருத்தணி முருகன் மலைப்பாதையில் இருந்து நகர தலைவர் மருத்துவர் ஸ்ரீகிரண் தலைமையில், 100க்கும் மேற்பட்ட பா.ஜ.,வினர் சீருடை அணிந்தும், கையில் கொடிகளை ஏந்தி, அரக்கோணம் சாலை, ம.பொ.சி.சாலை, அக்கைய்யநாயுடு சாலை, சித்துார் சாலை மற்றும் பைபாஸ் சாலை ரவுண்டானா வரை ஊர்வலம் நடக்கிறது.
மாலை, 5:30 மணிக்கு பைபாஸ் பகுதியில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆர்.எஸ்.எஸ்.,அமைப்பினர் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநிவாசா பெருமாள் மற்றும் திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் ஆகியோர் முருகன் கோவில் மலைப்பாதையில் இருந்து, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் ஊர்வலமாக செல்லும் சாலை மற்றும் பகுதிகளை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து ஊர்வலத்தின் போது எவ்வித அசம்பாவிதம் நடக்காமல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என டி.எஸ்.பி., கந்தன், இன்ஸ்பெக்டர் மதியரசன் ஆகியோரிடம் எஸ்.பி., அறிவுறுத்தினார்.