/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெரியகளக்காட்டூர் ஏரியில் ஆர்.டி.ஓ., ஆய்வு முன்னெச்சரிக்கையாக 400 மூட்டைகள் தயார்

ADDED : டிச 19, 2024 11:58 PM

திருவாலங்காடு, திருவாலங்காடு ஒன்றியம், பெரியகளக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்டது பெரிய ஏரி. நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி, 600 ஏக்கர் பரப்பளவிலானது. இந்த ஏரியில் மூன்று மதகுகள் உள்ளன.
சில மாதங்களாக பெய்த கனமழையால் ஏரி அதன் முழு கொள்ளளவைஎட்டியது. கடந்த 14, 15ம் தேதிகளில், ஏரி மதகில் இரண்டு இடத்தில் ஓட்டை விழுந்தது. இதனால் பெரியகளக்காட்டூர் விவசாயிகள் கலக்கமடைந்தனர்.
இதே நிலை நீடித்தால் மதகு உடைந்து விடும் அபாயம் உள்ளதாக கூறி நீர்வளத்துறை அதிகாரியிடம் தெரிவித்தனர்.
நீர்வளத் துறை அதிகாரிகள், வருவாய் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் உதவியுடன், 700 மண் மூட்டைகள் அடுக்கி மதகு ஓட்டையை சீரமைத்தனர்.
திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா நேற்று, ஏரியை ஆய்வு செய்து, பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் காளியம்மாள் மற்றும் நீர்வளத் துறை, ஊரக வளர்ச்சி துறையைச் சேர்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
திருவாலங்காடு நீர்வளத் துறை உதவி பொறியாளர் காதம்பரி கூறுகையில், ''ஏரி மதகு ஓட்டை முழுதும் அடைக்கப்பட்டது. விவசாயிகள் அச்சப்பட வேண்டாம். மீண்டும் மதகில் பழுது ஏற்பட்டால் சமாளிக்க முன்னெச்சரிக்கையாக 400 மண் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன,'' என்றார்.