/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எஸ்.ஐ.ஆர்., படிவம் பூர்த்தி செய்வதற்கு கல்லுாரி மாணவர்கள் முன்வரவேண்டும் ஆர்.டி.ஓ., அறிவுறுத்தல்

ADDED : நவ 28, 2025 03:39 AM

திருத்தணி: 'வாக்காளர் பட்டியல் திருத்தம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கு கல்லுாரி மாணவர்கள் முன்வரவேண்டும்' என திருத்தணி ஆர்.டி.ஓ.,கனிமொழி மாணவர்கள் இடையே நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருத்தணி சட்டசபை தொகுதியில், 330 ஓட்டுச்சாவடி களில் உள்ள வாக்காளர்களுக்கு, எஸ்.ஐ.ஆர்., என்கிற வாக்காளர்பட்டியல் திருத்தம் விண்ணப்பம் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலானோர் விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டதோடு சரி, அதை பூர்த்தி செய்து, ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் ஒப்படை க்காமல் உள்ளனர்.
இந்நிலையில் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி நேற்று திருத்தணி அரசு கலைக் கல்லுாரி மற்றும் தனியார் கல்லுாரிகளில், மாணவ- மாணவியர் இடையே எஸ்.ஐ.ஆர். விண்ணப்ப படிவம் நிரப்புவது, விண்ணப்பங்கள் கொண்டு வந்து சேர்ப்பது குறித்து பேசியதாவது:
கல்லுாரி மாணவ- மாணவியர் எஸ்.ஐ.ஆர்., படிவம் நிரப்புவதற்கு தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு உதவ வேண்டும். எஸ்.ஐ.ஆர்., படிவத்தில் உள்ள விவரங்களை வாக்காளர்களிடம் கேட்டறிந்து நீங்களே கூட நிரப்பி, கல்லுாரிக்கு கொண்டு வந்தால், நாங்களே வந்து பெற்றுக் கொள்கிறோம்.
வரும், 30ம் தேதிக்குள் பூர்த்தி விண்ணப்பங்கள் திரும்பி எங்களிடம் வழங்கினால், அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்கள் இடம் என்பதையும், மாணவர்கள் ஆகிய நீங்கள் அனைத்து தரப்பினருக்கும் தெரியபடுத்த வேண்டு ம்.
இவ்வாறு அவர் பேசினார்.