ADDED : அக் 03, 2024 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி, பிரித்வி நகரைச் சேர்ந்தவர் அமிர் மொய்தீன். இவரது 2 வயது ஆண் குழந்தை முகமது ஆசீப். நேற்று முன்தினம் மாலை, மாடியில் விளையாடி கொண்டிருந்த குழந்தை தவறி கீழே விழுந்தது.
இதில், தலையில் பலத்த காயங்களுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தை, நேற்று அதிகாலை உயிரிழந்தது. கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

