/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாது சங்கர மடம் முருகர் கோவில் கும்பாபிஷேகம்
/
சாது சங்கர மடம் முருகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : பிப் 01, 2025 09:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம், லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் தெருவில் உள்ளது சாது சங்கர மடம் முருகர் கோவில். இந்த கோவிலில் கந்தசஷ்டி, கிருத்திகை உள்ளிட்ட உற்சவங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கோவில் புனரமைப்பு பணிகள், கடந்த ஆண்டு துவங்கியது. பக்தர்களின் பங்களிப்புடன் துவங்கி நடந்து வந்தது. பணிகள் நிறைவடைந்த நிலையில், நாளை காலை 6:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.
இதற்கான யாகசாலை பூஜை நேற்று, கணபதி பூஜையுடன் துவங்கியது. இன்று, காலை 9:00 மணிக்கு கோ பூஜையும், தன பூஜையும் நடைபெற உள்ளன.