ADDED : நவ 23, 2024 08:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:சத்ய சாயிபாபாவின் 99வது பிறந்த நாள் விழா, திருவள்ளூர் சத்ய சாயி சேவா சமிதி சார்பில் நேற்று நடந்தது. அதிகாலை சுப்ரபாதம் நகர சங்கீர்தனம், சஹஸ்ரநாம அர்ச்சனை மற்றும் பஜனை நடந்தது.
தொடர்ந்து, சப்தாகம் பாராயணம், ஸத்சங்கம் மஹா மங்கள ஆரத்தி உள்ளிட்ட சேவை நடைபெற்றது. பின், ஏழை, எளியோருக்கு அன்னாதானம் நடைபெற்றது. இதில், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள சத்யசாயிபாபா பக்தர்கள் பங்கேற்றனர்.