/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வேளாண் அலுவலகத்தில் தார்ப்பாய் விற்பனை
/
வேளாண் அலுவலகத்தில் தார்ப்பாய் விற்பனை
ADDED : பிப் 16, 2024 10:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டையில் இயங்கி வரும் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில், விவசாய பயன்பாட்டிற்கான தார்ப்பாய், மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
சில்வர் நிறத்துடன், 6 மீட்டர் நீளம், 5 மீட்டர் அகலம் கொண்ட தார்ப்பாய் ஒவ்வொன்றும், 250 ஜிஎஸ்எம், தடிமன் கொண்டவையாகும். ஒரு தர்ப்பாய், 1,400 ரூபாய் என்ற மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
தேவைப்படுவோர், ஆதார் அட்டையுடன், விவசாய நிலத்திற்கான சிட்டா நகல் கொண்டு வர வேண்டும் என, வேளாண் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.