/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோவிலில் சமபந்தி விருந்து
/
திருத்தணி கோவிலில் சமபந்தி விருந்து
ADDED : பிப் 04, 2025 01:03 AM

திருத்தணி, முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் நினைவு நாளையொட்டி, திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, மதியம் 12:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
அதை தொடர்ந்து, ஆபத்சகாய விநாயகர், சண்முகர், வள்ளி, தெய்வானை, துர்க்கை மற்றும் உற்சவர் முருகப்பெருமான் ஆகிய சன்னிதிகளில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
தொடர்ந்து, காவடி மண்டபத்தில் பக்தர்களுக்கு சமபந்தி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், முருகன் கோவில் ஆணையர் ரமணி, திருத்தணி டி.எஸ்.பி., கந்தன், அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, நாகன் ஆகியோர் சமபந்தி விருந்தை துவக்கி வைத்தனர்.
இதில், 1,500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு பொதுவிருந்து வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.