/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளிப்பட்டில் பராமரிப்பு இல்லாத சமத்துவபுரம்
/
பள்ளிப்பட்டில் பராமரிப்பு இல்லாத சமத்துவபுரம்
ADDED : நவ 09, 2025 04:10 AM

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ராமசமுத்திரம் சமத்துவபுரத்தை முறையாக பராமரிக்காததால், அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
பள்ளிப்பட்டு ஒன்றியம், ராமசமுத்திரம் ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில், 100 குடியிருப்புகள் உள்ளன. இங்கு, மழைநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால், மழைநீர் வடிகால்வாய்கள் துார்ந்துள்ளன. தெருவில் மழைநீர் கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் குழாய்களின் மேல் மண் சரிந்து கிடப்பதால், இந்த குழாய்களை தாண்டி, வீடுகளுக்கு செல்ல முடியாமல், அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சமத்துவபுரம் நுழைவாயிலை ஒட்டியுள்ள பூங்காவும் சீரழிந்துள்ளது. இங்குள்ள விளையாட்டு சாதனங்கள் சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து, துருப்பிடித்து வீணாகி வருகின்றன. மக்கள் நடமாட முடியாத அளவிற்கு, இந்த பூங்கா மோசமான நிலையில் உள்ளது.
எனவே, மழைநீர் வடிகால்வாய்கள் மற்றும் பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

