/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சம்பா நெற்பயிர் காப்பீடு வரும் 30 வரை அவகாசம்
/
சம்பா நெற்பயிர் காப்பீடு வரும் 30 வரை அவகாசம்
ADDED : நவ 23, 2025 03:10 AM
திருவள்ளூர்: விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய, வரும் 3௦ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை பருவத்தில், இயல்பான மழையளவு 60.4 செ.மீ., கிடைக்கப் பெறும். தற்போது வரை, 42.5 மி.மீ., மழை பொழிவு பெறப்பட்டு, 600 ஏக்கர் நெற்பயிர் பாதிக்கப்பட்டுள்ளது.
டிச., மாதத்தில் அதிக மழைப்பொழிவு பெற வாய்ப்புள்ளது.
எனவே, தொடர் மழை வெள்ளம், பூச்சி நோய் தாக்குதல் உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய, விவசாயிகள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.
ஏற்கனவே, கடந்த 15ம் தேதி பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது, 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அல்லது இ - -சேவை மையத்தில், ஏக்கருக்கு 545 ரூபாய் செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

