நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:வெங்கல் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட, அகரம்கண்டிகை கிராமத்தின் சுடுகாட்டுப் பகுதியில் மணல் எடுப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. வெங்கல் போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே வந்த லாரியை மடக்கினர்.
போலீசாரை கண்டதும், ஓட்டுனர் தப்பி ஓடினார். போலீசார் துரத்தி சென்று பிடித்து விசாரித்ததில், பாப்பிரெட்டிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி, 35, என்பது தெரியவந்தது. போலீசார் அவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். லாரியில் கடத்தல் மணல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

